கடலூர் மாவட்டம், வடலூர் அரசு பணிமனைகோட்டம் 2 ல்இருந்து வடலூர் முதல் மருதூர் வழியாக புவனகிரி சிதம்பரம் வரையில் தடம் எண் 24 என்கின்ற அரசு பேருந்து தினம்தோறும் காலை இயக்குவது வழக்கம் இந்த அரசுப் பேருந்தை நம்பி ஆலம்பாடி . கிருஷ்ணாபுரம் நத்தமேடு ஜெயங்கொண்டான் மருதூர் தலைக்குளம் கொளக்குடி ஆகிய கிராம பகுதிகளில் இருந்து கிராமப்புற பள்ளி கல்வி மாணவ மாணவிகள் வடலூர் மற்றும் புவனகிரி ஆகிய பகுதிகளில் பயணித்து படித்து வரும் நிலையில்
தமிழக அரசு மகளிருக்கான இலவச பேருந்து சலுகையின் அறிவிப்பால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் சரிவர திடீர் திடீர் என்று பேருந்தை இயக்காததால் இன்று 20/02/2023 காலை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் புத்தக பைகளுடன் நடந்து செல்லும் அவலம் நீடித்து வருகிறது.
இதனால அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் நலன் கருதிகூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவும் இயக்கிய பேருந்துகளை நிறுத்தாமல் சரிவர கண்காணித்து இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment