கார் தலைகீழா கவிழ்ந்து விபத்து - நெடுஞ்சாலைத்துறை அலட்சியப் போக்கால் விபத்துக்கு காரணம் என வாகன ஓட்டிகள் திடீர் சாலை மறியல் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 February 2023

கார் தலைகீழா கவிழ்ந்து விபத்து - நெடுஞ்சாலைத்துறை அலட்சியப் போக்கால் விபத்துக்கு காரணம் என வாகன ஓட்டிகள் திடீர் சாலை மறியல்

சென்னையிலிருந்து விருத்தாசலம் நோக்கி வந்த கார் தலைகீழா கவிழ்ந்து விபத்து அதிர்ஷ்டவசமாக மூன்று பேர் உயிர்த்தபினர். நெடுஞ்சாலைத்துறை அலட்சியப் போக்கால் விபத்துக்கு காரணம் என வாகன ஓட்டிகள் திடீர் சாலை மறியல் விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை சாலை சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்புகடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில்,நெடுஞ்சாலை துறை சார்பில் விருத்தாசலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை வரை சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது,விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி கிராமம் அருகே தரைப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 


இந்த நிலையில், சென்னையில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்த இரண்டு பெண்கள் ஒரு ஆண் உள்ளிட்ட மூன்று பேர் வந்து கொண்டிருந்தனர் அப்பொழுது செம்பளகுறிச்சி அருகே கார் வந்து கொண்டு இருக்கும் பொழுது, அங்கு பாலம் கட்டும் பணி நடைபெற்ற வரும் நிலையில் அங்கு எந்த விதமான எச்சரிக்கை பலகையோ தடுப்பு கட்டைகளோ வைக்காததால் கார் நிலை தடுமாறி தரைப்பாலம் கட்டும் பணிக்காக கொட்டப்பட்ட மண் மேட்டில் ஏறி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்கானது, 


காரில் சிக்கிக்கொண்ட இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை அவ்வழியாக சென்று கொண்டிருந்த இளைஞர்கள் காரில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றினர், நெடுஞ்சாலை துறையின் அலட்சியத்தால் இந்த விபத்து நடைபெற்றதாக கூறி வாகன ஓட்டிகள் மற்றும் இளைஞர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் காவல் துறையினர் பொதுமக்களிடம் சமரசத்தில் ஈடுபட்டனர் பின்பு சாலை மறியல் கைவிடப்பட்டது.

No comments:

Post a Comment