வடலூரில் இந்திய சித்த வைத்தியர்கள் மாநாடு நடைபெற்றது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 5 February 2023

வடலூரில் இந்திய சித்த வைத்தியர்கள் மாநாடு நடைபெற்றது

வடலூரில் இந்திய சித்த வைத்தியர்கள் மாநாடு நடைபெற்றது 



தொன்று தொட்டு 45 வது அகில இந்திய சித்த வைத்தியர்கள் மாநாடு மற்றும் வள்ளலார் 200 வது அவதார விழா வடலூரில் மிக விமர்சியாக நடைபெற்றது. சாது சிவராம அடிகளார் திருகண்டீஸ்வரம் நீதியரசர் ஓய்வு வைத்தியநாதன் முன்னிலையிலும் நடைபெற்றது. 


சிறப்பு விருந்தினர் முதல் உலக மூத்த குடிமகன் இயக்க தலைவர் டாக்டர்.C.K.அசோக்குமார் மூலிகை அனுக்கள் விஞ்ஞானி புருஷோத்தமன் அமெரிக்கா, திண்டுக்கல்லை சேர்ந்த டாக்டர்.சங்கரசுப்பிரமணியன், வடலூர் தலைமை தன்மார்க்க சங்க தலைவர் டாக்டர்.அருள்நாகலிங்கம், ஈரோடு, அகில இந்திய தகவல் மற்றும் சட்ட முன்னனி தலைவர் பண்ணை ரவி துணைத்தலைவர் ரவிச்சந்திரன், சென்னை, இம்ப்காப்ஸ்லிருந்து டாக்டர்.D.சேதுராமன், சுஷான்லி இயக்குநர் C.A.ரவி, கலந்துகொண்டு சிறப்பித்தனர். 



மாநாட்டில் துணைத்தலைவர் A.G.தனபால், சென்னை M.பாஸ்கரன் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து சித்த வைத்தியர்களும், சித்த வைத்திய அமைப்புகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாநாட்டில் அனைவரின் முன்னிலையிலும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1. தடை செய்யப்பட்ட மான்கொம்பு பஷ்பம் என்னும் சிரிங்கி பஷ்பத்தை மக்களின் உடல் நலத்தை காக்க அரசு மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.


2.அரசு பதிவில்லா 60 வயதை கடந்த பரம்பரை வைத்தியர்களுக்கு மாதம் ரூ.3,000/-ம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.


3. அழிந்து வரும் சிவகரந்தை, அமிர்த சஞ்சீவி, பாராங்கல்லில் வளரும் சோத்துகத்தாழை இதை போன்று பல்வேறு மூலிகை உள்ளது. இதை அரசே ஏற்று பண்ணைகள் அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


4.அரசு சித்த மருத்துவ கல்லூரியில் பரம்பரை வைத்தியர்களுக்கு 50சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.


5. பரம்பரை சித்த வைத்தியர்களுக்கு நலவாரியம் மறைந்த முதல்வர் கலைஞர் அவர்கள் 2011ல் நடைமுறைக்கு கொண்டுவந்தார்கள் 


மாநாட்டில் புனித இருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி மாணவ மாணவியர்கள் சிறப்பு பேச்சுப்போட்டி நடைபெற்றது, வள்ளலார் வாழ்வியலும் சித்த மருத்துவ சிறப்புகளைப் பற்றியும், பேச்சுப்போட்டி நடைபெற்றது. நடுவராக நெய்வேலியை சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆலோசகர் N.N. ராஜா, தலைமையில் நடைபெற்றது. வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு பதக்கம், பாராட்டுச்சான்றிதழ் நீதியரசர் வைத்தியநாதன் மற்றும் மாநாட்டு செயலாளர் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டது. 

மாநாட்டில் மக்களின் நலனை கருதி சித்த மருத்துவ விற்பனையரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இடம் பெற்ற நிறுவனங்கள் இம்ப்காப்ஸ், SKM, அரவிந்தன், மெடிசீத், சோலமலை, வி.ஹேர்பல், அகத்தியர் மெய்ஞான பீடம் மருந்துகள், அமைக்கப்பட்டிருந்தது.



மாநாட்டிற்கு ஒத்துழைப்பு நல்கியவர்கள், துணைத்தலைவர் ரூமி.ராஜசேகரனும், ராமர்,பொருளாளர் N.ரவி, மற்றும் செங்கல்மேடு பாண்டியன், சாஸ்தா மணிகண்டன், சில குமார், மற்றும் நெய்வேலியை சேர்ந்த தனசேகர் அருட்பெருஞ்ஜோதி ராம்குமார், அம்பிநாதன், விழுப்புரம் நெடுமாறன், நெடிமுருகதாஸ், மயிலாடுதுறை, தாமரைக்கண்ணன், கடலூர் மெஹருன்னிசா, சிவக்குமார், காட்டுமன்னார்கோயிலை சேர்ந்த சிதம்பரம் இளங்கோவன் ஸ்ரீமுஷ்ணம் G.வேல்முருகன் மேட்டுபாளையம் குமார், திட்டக்குடி, ஷம்சுதின், நெல்லிக்குப்பம் S.ராஜா, தில்லைநடராஜன், பண்ருட்டியை சேர்ந்த யோகம், அருள்பிரகாசம், வடலூர் ராஜவேலு,  விருத்தசாலம், சுந்தரராமன், R.S.வஜிரவேல், கள்ளக்குறிச்சி, செந்தில்குமார், சிதம்பரம், சேதுநாராயணன், அருள்பிரகசாம், சென்னை, ரகு மாநாட்டின் ஏற்பாட்டினை பொதுச்செயலாளர் G.கருணாமூர்த்தி ஏற்பாடு செய்திருந்தார்.

No comments:

Post a Comment

*/