கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மருதூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று உலகிற்கு எடுத்துரைத்த வள்ளலார் அவதார இல்லம் அமைந்துள்ளது. இங்கு வடலூரில் சத்திய ஞான சபையில் 152 வது தைப்பூச விழா ஜோதி தரிசனத்தை கண்டு தரிசனம் செய்து வரும் பக்தர்கள், மருதூர் கிராமத்தில் வந்து அவதார இல்லத்தில் உள்ள அணையா தீபத்தையும், பாதாள அறையில் உள்ள வள்ளலாரின் தாய், தந்தை, வள்ளலாரின் குழந்தைப் பிராயத்து சிலை ஆகியவற்றையும் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர்.
தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று காலை சன்மார்க்கக் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சன்மார்க்கப் பாராயணம், திருவருட்பா, உள்ளிட்ட பல்வேறு வள்ளலாரின் சொற்பொழிவுகள் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இன்று வடலூர் தைப்பூச விழாவை முன்னிட்டு அதே நேரத்தில் மருதூர் கிராமமும் மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிகிறது. மேலும் இடைவிடாது அன்னதானமும் நடந்து வருகிறது. இந்த விழாவில் தொடர்ச்சியாக நாளை மற்றும் ஏழாம் தேதி வரையும் சிறப்பு அன்னதானம் ,மக்கள் வருகை, வழிபாடுகள் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment