சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக கண் தானம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 6 February 2023

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக கண் தானம்

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக கண் தானம் பெறப்பட்டது.


மதுராந்தகநல்லூர் கிராமத்தை சேர்ந்த தற்போது சிதம்பரம், கீழ ரத வீதி சாரதாராம் அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கும் அனந்தபத்மநாபன் பிள்ளை அவர்களுடைய மகனும் தில்லை மெட்ரிக் பள்ளியின் தாளாளர் செந்தில்குமார் அவர்களுடைய உறவினரும், எ.பாஸ்கரன் சகோதரரும், ரா.குமரன் தந்தையுமான  எ.ராஜேந்திரன் (வயது-72) அவர்கள் இயற்கை எய்தினார்.


அன்னாருடைய இரண்டு கண்களும் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சேவையை சிதம்பரம் கண், இரத்தம் மற்றும் உடல் தான சங்கத்தின் தலைவர் .ராமச்சந்திரன், சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் துணைத் தலைவர் செந்தில்குமார், பொருளாளர் எல்.சி.ஆர். நடராஜன் மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்து செய்தனர்

No comments:

Post a Comment

*/