கடலூர் பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் கிழக்கு மாநகர செயற்குழு கூட்டம் செம்மண்டலம் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு கடலூர் கிழக்கு மாநகரத் தலைவர் பொறியாளர் வேலு வெங்கடேசன் தலைமை தாங்கினார். டி. செந்தில்குமார் வரவேற்பு உரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் கடலூர் நகர பார்வையாளர் எஸ். குமார் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மகளிர் நிர்வாகிகள் குத்துவிளக்கு ஏற்றினார்கள். இந்தக் கூட்டத்தில் பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளர் அரசு ரங்கராஜ் சிறப்புரையாற்றினார். இந் நிகழ்வில் ஆன்மீக மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்தர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தீர்மானங்களை மாநகர பொதுச்செயலாளர் முருகன் துணைத்தலைவர் பிரகாஷ் துணைத் தலைவர் காந்தி குமார் முத்துக்குமார் ஆகியோர் தீர்மானங்களை வாசித்தனர். கட்சியின் எதிர்கால கடமைகள் குறித்து கடலூர் மாநகர துணை தலைவர் பி ஏழுமலை விளக்கிப் பேசினார். இறுதியில் வி. மணி இந்திரஜித் நன்றி கூறினார்.
செயற்குழு கூட்டத்தில் கீழ்கண்ட கீழ் காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜார்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்ற சி பி ராதாகிருஷ்ணன் வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பள்ளிகளின் ஆர் டி ஆர்- ல் மாணவர்களை சேர்ப்பதில்லை அதற்கான நடவடிக்கை எடுக்க கோரி பள்ளி கல்வித்துறை இயக்குநருக்கு கடிதம் வாயிலாக அழுத்தம் தருவது என தீர்மானிக்கப்பட்டது.கடலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை நீரை சுத்திகரிக்கும் நிலையம் செயல்படாமல் உள்ளதை கண்டித்தும்,கடலூர் நகரில் வாகன நெருக்கம் மிகுந்த சாலைகளை விரிவாக்கம் செய்யவும் தினமும் குப்பைகளை அகற்றி மாநகராட்சி யை தூய்மை பேணிக்காக்கவும் வீட்டு வரிகளை குறைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் இரவு நேரங்களில் பொதுநல மருத்துவர் பணியில் இருக்க கோருதல், மலேரியா ,டெங்கு, சிக்கன் குனியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களை ஒழிக்க தினமும் கொசு மருந்து அடிக்க மாநகராட்சிக்கு அழுத்தம் தருதல், மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து போராட்டம் நடத்துதல் வங்கிகளில் மத்திய அரசு திட்டங்கள் மூலம் வழங்க வேண்டிய கடன் உதவிகளை வழங்க செய்தல் மக்களுக்கு மத்திய அரசு திட்டங்கள் சென்றடைய வழிவகை செய்தல்.
மழைக்காலங்களில் வெள்ள நீர் விரைவில் வடிய சரியான வடிகால் வசதி ஏற்படுத்த அரசை நிர்பந்திப்பது நியாய விலை கடைகள் முறையாக இயங்க கூட்டுறவு துறைக்கு அழுத்தம் தருதல் மாநகரத்தில் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வைத்தல் பேருந்து நிலையம் கடலூர் மாநகரத்தில் தக்கவைக்க போராட்டங்கள் நடத்துவது வரும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை குறைக்க ஆங்காங்கே கூரை இல்லாமல் உள்ள பயணிகள் நிழற்குடைகளை சீரமைக்க ஆவணம் செய்தல் உணவுத்துறை செயல்பாட்டை சுட்டிக்காட்டி ஓட்டலில் நடக்கும் சுகாதார சீர்கேடான செயல்களை முடக்குவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment