நெய்வேலியில் மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 February 2023

நெய்வேலியில் மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்!!

நெய்வேலியில் மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்


கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 16 பகுதியில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது இக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 



மேலும் நடன நிகழ்ச்சிகளான பரதநாட்டியம் ,கோலாட்டம், இசை கச்சேரிஆகியவை நடைபெற்றது. ஆசியாவிலேயே 10 அடி உயரம் இரண்டரை டன் எடை கொண்ட சிவலிங்கம் இக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திருத்தொண்டம்மாள் சிலை தனியே அமைந்திருப்பது இக்கோயிலின் சிறப்பம்சமாகும். 


இதனைத் தொடர்ந்து கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா சிறப்பு நேரலை நெய்வேலி பேருந்து நிலையம் அருகே உள்ள திடலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியை நெய்வேலி இந்தியா லிமிடெட் அதிபர் பிரசன்னா குமார் மோட்டுபள்ளி அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். 


பின்னர் பொதுமக்கள் அனைவரும் ஆதியோகி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் நெய்வேலி ஈஷா யோகா மையம் சார்பில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. 


நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியை நேரலையில் கண்டு களித்தனர்.

No comments:

Post a Comment

*/