வள்ளலாரின் அவதார இல்லத்திற்கு வந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் காரை விட்டு இறங்கும் முன் அவரது காலில் விழுந்து கதறிய தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் உளுந்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜெயகாந்தன், சிவகாமசுந்தரி தம்பதி. அந்த தம்பதியின் வீட்டின் அருகில் அரசுப்பணியாளரான அவினாஷ் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான ஜெயகாந்தனின் வீட்டுமனையை அவினாஷ் அபகரித்ததாக புகார் எழுந்தது.
இதை அவினாஷிடம் சென்று நியாயம் கேட்ட தம்பதியை அவினாஷ் தரப்பினர் தாக்கியுள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்த தம்பதி தங்கள் பகுதிக்கு ஆட்சியர் வருவதை அறிந்து அவரிடம் சென்று முறையிட்டனர். முழு விவரத்தையும் கேட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment