கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் இயங்கி வரும் தமிழ்நாடு திருநீலகண்டர் தொழிற்சங்கம் மற்றும் தமிழகம் முழுவதும் இயங்கி வரும்அனைத்து குலாலர் மக்கள் இயக்கம் இணைந்து நடக்க இருக்கின்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிப்பது என்று முடிவு செய்து அறிவித்திருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமியின்ஆசிபெற்ற வேட்பாளர் கே.எஸ். தென்னரசு அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிப்பதற்கு ஆதரவினை அளித்ததோடு ஆதரவுக் கடிதத்தினை முன்னாள் முதலமைச்சர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தமிழ்நாடு திருநீலகண்டர் தொழிற்சங்கத்தின் ஈரோடு மாவட்ட செயலாளர் எஸ். சசிகுமார் தலைமையில் ஈரோடு என்.சி. வெங்கடாசலம், கே. சீனிவாசன், இ.சௌமியா, எஸ்.ராஜாமணி, மற்றும் மாநில பொதுச் செயலாளர் ஏ.கே.ராஜா, மயிலாடுதுறை மாவட்ட தலைவர் காசி. பாலசுப்பிரமணியன், கடலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் வி.எஸ். மணி மற்றும் நிர்வாகிகளோடுசென்றுஆதரவு கடிதத்தை அளித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment