கடலூர் மாவட்டம் புவனகிரியில் இயங்கி வரும் ஆர்.வி.பி.மருத்துவமனையில் மக்கள் பயன்பாட்டிற்காக புதியதாக ஆம்புலன்ஸ் சேவை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.வி.பி.மருத்துவமனை மருத்துவர் டாக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.டாக்டர் சுனிதா கதிரவன் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக புவனகிரி வர்த்தக சங்க பொதுச்செயலாளர் ஏ.சி.பி இரத்தின சுப்பிரமணியன் கலந்து கொண்டு ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகி நெடுமாறன், மருத்துவமனை ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மருத்துவர் மங்கலேஸ்வரன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment