காட்டுமன்னார்கோயில் அருகே மின்சார வேளியில் சிக்கி விவசாயி பலி போலீசார் விசாரணை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 27 February 2023

காட்டுமன்னார்கோயில் அருகே மின்சார வேளியில் சிக்கி விவசாயி பலி போலீசார் விசாரணை

காட்டுமன்னார்கோயில் அருகே மின்சார வேளியில் சிக்கி  விவசாயி பலி போலீசார் விசாரணை



கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே சோழத்தரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கொண்ட சமுத்திரம் கிராமத்தில் விராகுடி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவருக்கு விவசாய வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது இந்த நிலையில் ஜனார்த்தனன் அவரது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சுப்பிரமணியன் சென்றதாக தெரிகிறதுதெரிகிறது. 


அப்பொழுது ஜனார்த்தனன் தனது வயலுக்கு   காட்டுப் பன்றி அதிகமா வருவதால் மின்சார வேலி போட்டுள்ளார் அதை அறியாமல் சுப்பிரமணியன் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற இடத்தில் மின்சார கம்பியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார் இது குறித்து உடனடியாக அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்து அவரது குடும்பத்தினர் இறந்த அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். 


பின்னர் சோழத்தரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு சேத்தியாத்தோப்பு  காவல் துணை கண்காணிப்பாளர் ரூபன் குமார் மற்றும் சோழத்தரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர் பின்னர் அவரது உடலை காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது பின்னர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது


இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் 


எங்கள் பகுதியில் வனவிலங்குகள் அதாவது மயில்கள் காட்டு பன்றிகள் மற்றும் பெயர் தெரியாத வனவிலங்குகள் நிறைய உள்ளன இது இப்பகுதி விவசாய நிலங்களை இரவு நேரங்களில் அழித்து வருகிறது இதனால் அப்பகுதி விவசாயிகள் வயல்களில் மின்சார வேலை அமைத்துள்ளனர் இதனால் நிறைய மைல்கள் காட்டு பன்றிகள் காட்டுப் பூனைகள் இறந்து வருகிறது தற்பொழுது எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் இன்று இறந்து உள்ளார் இதற்கு நிரந்தர தீர்வாக வயல்களில் மின்வெளி அமைப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இறந்து போனவருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்


விண்வெளியில் சிக்கி ஒருவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது



செய்தியாளர் கே பாலமுருகன் 

No comments:

Post a Comment

*/