வடலூர் சேராக்குப்பம் பகுதியில் விக்கிரவாண்டி கும்பகோணம் நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் போது பொதுமக்கள் சாலை மறியலில் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 27 February 2023

வடலூர் சேராக்குப்பம் பகுதியில் விக்கிரவாண்டி கும்பகோணம் நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் போது பொதுமக்கள் சாலை மறியலில்

வடலூர் சேராக்குப்பம் பகுதியில் விக்கிரவாண்டி கும்பகோணம் நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் போது பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது


கடலூர் மாவட்டம், வடலூர் பகுதியில் விக்கிரவாண்டி கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி  நடைபெற்று வருகின்றது இதற்காக வடலூர் பகுதியை சுற்றியுள்ள சேராகுப்பம் மருவாய் ஆகிய பகுதிகளில் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை மேற்கொள்ளும் பணி தற்பொழுது நடந்து வரும் நிலையில் சேராக்குப்பம் பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் புதிதாக அமைத்து வரும் சாலை அருகே மறியலில் ஈடுபட முயற்சித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடலூர் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்கள் சாலை மறியல் முயற்சியை கைவிட்டனர். 


பின்னர் நெளிஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு ஒரு மாதத்திற்குள் இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment