வடலூர் சீயோன் உயர்நிலை பள்ளியில் 43 வது ஆண்டு விழா நடைபெற்றது
கடலூர் மாவட்டம் வடலூர் சீயோன் உயர்நிலை பள்ளியில் 43 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் சாந்தாமணி அவர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களால் பெற்றோர் படும் பாடு என்ற தலைப்பில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் பெற்றோர்கள் இடையே நடக்கும் நகைச்சுவை நிகழ்வுகளை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் இந்தியன் வங்கி மேலாளர் விஜயராணி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மேலாளர் மேனகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குற்று விளக்கேற்றி விழாவை தொடக்கி வைத்தனர் தாங்கள் அப்பள்ளியில் படித்த போது நடைந்த பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து எடுத்துரைத்தனர்.
பின்னர் பள்ளியில் முதல் மற்றும் இரண்டாம் தரவரிசை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் நிறுவனர் லயன் சாமுவேல் மற்றும் முதல்வர் பிரவீன் சாமுவேல் ஆகியோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்
மேலும் நிகழ்ச்சியில் பள்ளி பயிலும் மாணவிகளின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளான பரதநாட்டியம்
மழலை செல்வங்களின் நடன நிகழ்ச்சி மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment