கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் ஆறுமுகம் இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலகுறைவு காரணமாக காலமானார்.
இந்நிலையில் வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்களின் காக்கும் கரங்கள் அமைப்பு சார்பில் மறைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஆறுமுகம் அவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் இரா.ராஜாராம் அவர்களின் அறிவுறுத்தலின்படி காக்கும் கரங்கள் சார்பில் ரூபாய் 7 லட்சத்தி 22 ஆயிரத்து 500 ரூபாய் நிதியை கடலூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் அசோக் குமார் அவர்கள் வழங்கிஆறுமுகம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
நிகழ்ச்சியில் நெய்வேலி சேத்தியாத்தோப்பு பண்ருட்டி ஆகிய உட்கோட்டங்களை சேர்ந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர்களானரா ஜேந்திரன், ரூபன்குமார், சபியுல்லா காவல் ஆய்வாளர்கள் பாண்டிச்செல்வி, சாகுல் அமீத், ராஜா ,மலர்விழிஉதவி காவல் ஆய்வாளர்கள் , காவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் கலந்து கொண்டு படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment