விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயம் மிகப் பழமையான பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக பெருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.
இந்த ஆண்டிற்கான மாசமக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விருத்தகிரீஸ்வரர் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் சிவாசிசியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மலர்கள் தூவ கொடியேற்றம் நடைபெற்றது.
இன்று தொடங்கிய மாசி மக விழா, 6ம் நாள் திருவிழா எனப்படும் பழமலைநாதர் விபசித்து முனிவருக்கு காட்சியளிக்கும் ஐதீக திருவிழா மார்ச் 2 தேதி, பஞ்ச மூர்த்திகளின் திருத்தேரோட்ட நிகழ்ச்சி மார்ச் 5ம் தேதி, மார்ச் 6ம் தேதி தீர்த்தவாரி, மார்ச் 7ம் தேதி சுவாமி தெப்ப திருவிழா,மார்ச் 8ம் தேதி சண்டிகேஸ்வரர் பூர்த்தி திருவிழாவுடன் இந்த ஆண்டிற்கான அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலய மாசிமக திருவிழா நிறைவு பெறுகிறது.
No comments:
Post a Comment