விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணி துறை சார்பில் சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஆயார்மடத்தெருவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணித்துறை சார்பில் சமுதாய வளைய காப்பு குழந்தைகள் வளர்ச்சி பணி திட்ட அலுவலர் முல்லை அழகி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் விருத்தாசலம் ஒன்றிய பெருந்தலைவர் மலர் முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மேற்பார்வையாளர் கற்பகம் முன்னிலை வைத்தார்.
இதில் 150க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியில் பட்டு புடவை,மாலை, வளையல், சந்தானம், குங்குமம், ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி, பக்கிரசாமி, மணிவண்ணன் மற்றும் சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது
No comments:
Post a Comment