திட்டக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 February 2023

திட்டக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம்

திட்டக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 


கடலூர் மாவட்டம் திட்டக்குடி  அண்ணாதுரை சந்திரா திருமண மண்டபத்தில் கடலூர்  மேற்கு மாவட்டத்தின் சார்பாக திட்டக்குடியில் ஒன்றிய செயற்குழு கூட்டம் கடலூர் மேற்கு மாவட்ட  தலைவர் K.மருதை தலைமையில் இந்தக் கூட்டம்  நடைபெற்றது.


மாவட்ட பொதுச் செயலாளர்கள் முத்துலட்சுமி மாமல்லன் வரவேற்றார்.மாவட்ட பொதுச் செயலாளர்  ரெங்கராஜ் மற்றும் மாவட்ட பொருளாளர்  முருகன் முன்னிலை வகித்தார். 


மாவட்டத் துணைத் தலைவர் ஐயப்பன் ரவி கலந்து கொண்டார். மாநில செயற்குழு  உறுப்பினர்கள் வேட்டைக்குடி  எழிலரசன்,எஸ் வி ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார்கள். சிறப்பு விருந்தினராக மாநில துணைத்தலைவர் AG. சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாநில பொது குழு உறுப்பினர் நரேந்திரன்,எஸ்சி அணி துணைத் தலைவர் வெற்றிவேல்,மாநில பொதுச் செயலாளர் ஆவட்டி கணேசன்  கலந்து கொண்டார். திட்டக்குடி நகர மண்டல தலைவர்  பூமிநாதன் நன்றியுரை  கூறினார். 

அமைப்புச் செயலாளர் பாண்டுரங்கன்  கட்சியின் அமைப்பு வேலைகளை பற்றி எடுத்துக் கூறினார். மற்றும் திட்டக்குடி வெள்ளாற்றில் காவிரி நீர் வரவழைக்க பரிந்துரை செய்யவும், பெண்ணாடம் ரயில் நிலையத்தில் பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ்  நின்று செல்ல வழிவகை செய்யவும் இன்னும்  பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்டன. பாரதிய ஜனதா கட்சி நிருவகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டடானர்.

No comments:

Post a Comment

*/