சிதம்பரம் பாரதிய ஜெயின் சங்கட்டனா சார்பில் கடலூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிதம்பரத்தில் உள்ள மருத்துமனையில் பிரசவ வார்டில் பிரசவிக்கு தாய்மார்களுக்கு உதவியாளர்கள் அமர்வதற்காக ருபாய் 20000 ,ஆயிரம் செலவில் ஐந்து சிமென்ட் பெஞ்ச் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்விற்கு சங்க தலைவர் மணிஷ்செல்லானி தலைமை தாங்கினார், சங்க முன்னணி நிர்வாகிகள் கமல்கிஷோர்ஜெயின், மகாவீர் போரா, ஆகியோர் முன்னிலை வகித்தனர், மருத்துவர் MS லாவன்யாகுமாரி, வரவேற்றார். மருத்துவ கல்லூரி டின், மருத்துவர் திருப்பதி, அவர்களிடம் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் சிமென்ட் பெஞ்ச் ஒப்படகைப்பட்டது,சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து சங்க செயலாளர் தீபக்குமார் எடுத்துரைத்தார், மருத்துவக்கல்லூரி டின் மருத்துவர் திருப்பதி அவர்கள் சங்க செயல்பாட்டை பாராட்டி பேசினார்.
நிகழ்ச்சியில் மருத்துவர் பரசுராமன் மருத்துவர் பாரி,சங்க நிர்வாகிகள் இந்தர்சந்த்,பானுஷா,பிரகாஷ், சுஜித் ஆகியோர் கலந்துக்கொண்டனர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் நன்றி கூறப்பட்டது.
No comments:
Post a Comment