ஆவட்டி திருமண மண்டபத்தில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு சீர்வரிசை கொடுத்து வளையல் அணி திருவிழா நடத்தினர்.
கடலூர் மாவட்டம் மங்களூர் வட்டாரம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சமய வளைய காப்பு விழா நடைபெற்றது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வழிகாட்டுதலோடு மங்களூர் ஒன்றிய பெருந்தலைவர் கே என் டி சுகுணா சங்கர், மங்களூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆட்மா குழு தலைவர் பா.செங்குட்டுவன்,மங்களூர் துணை பெருந்தலைவர் கலைச்செல்வி செல்வராஜ், திட்டக்குடி நகர மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இந்த விழாவில் 250 கற்பிணி பெண்களுக்கு புடவை, வளையல், பழம், மாலை அணிவித்து தட்டு சீர்வரிசை கொடுத்து வளையல் அணி திருவிழா நடத்தினர். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment