விருத்தாசலத்தில் உயிருக்கு போராடிய குரங்கை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த சமூக ஆர்வலர் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 February 2023

விருத்தாசலத்தில் உயிருக்கு போராடிய குரங்கை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த சமூக ஆர்வலர்

 

விருத்தாசலத்தில் உயிருக்கு போராடிய குரங்கை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த சமூக ஆர்வலர் அகிலன்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் எம்ஜிஆர் நகரில் நேற்று மாலை குரங்கு ஒன்று அடிபட்டு ரத்தத்துடன் கிடந்ததை சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி வந்தது. இந்நிலையில்  ஏ கே சமூக நல அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் அகிலன் நேரில் சென்று பார்த்த போது மிகவும் கவலைக்கிடமான நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. 


எம்ஜிஆர் அதனை மீட்டு எம்.ஜி.ஆர். நகர் பொதுமக்களுடன் இணைந்து குரங்குக்கு பால் மற்றும் தண்ணீர் கொடுத்துவிட்டு,  விருத்தாசலம் வன சரகர் ரகுவரன் மற்றும்  வனத்துறையினருடன் இணைந்து  விருத்தாசலம் கால்நடைத்துறை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று மருத்துவ உதவி செய்து 

காப்பாற்றினார். உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்றிய இந்நிகழ்வு பொதுமக்களிடம் வரவேற்பையும் பாராட்டியும் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment