கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட குழு உறுப்பினர் தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாற்று திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை அமல்படுத்துவதற்கு, கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 240.39 கோடியில் இருந்து 150 கோடி ரூபாயாக நிதி குறைப்பை கண்டித்தும், கிராமப்புற மாற்றுத்திறனாளிகளும் பயன்பெற்று வரும் 100 நாள் வேலை திட்டத்திற்கு அதிர்ச்சி அளிக்கிற வகையில் 30% நிதி 13,000 கோடி குறைக்கப்பட்டதை கண்டித்தும்,
பொதுத்துறையில் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதால் வேலைவாய்ப்பு நெருக்கடியை சமாளிக்க, தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்த நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகைகள் அறிமுகப்படுத்த உரிமைகள் சட்டம் வலியுறுத்துகிற நிலையில் இதனை செய்ய மறுக்கும் மோடி அரசை கண்டித்தும், மத்திய அரசு தரும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை பங்கு தற்போது வரை 300 மட்டுமே அதுவும் நாட்டில் உள்ள மொத்த மாற்றுத்திறனாளிகளில் 3.8% பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள எண்பது சதவீதத்திற்கும் மேல் ஊனமுள்ளவர்களுக்கு மட்டுமே வழங்குவதாகவும் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் மோடி அரசு இத்தொகையை உயர்த்த மறுப்பதை கண்டிப்பதாக கூறி கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கண்டனம் முழக்கங்கள் எழுப்பினர்.போராட்டம் நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கு டீ பிஸ்கட் வழங்கிய காவலர்கள் வழங்கியது பொது மக்களுடைய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment