கஜா புயலின் போது மின்சார வாரிய தொழிலாளர் மரம் முறிந்து இறந்தார் அரசு இதுவரை இழப்பீடு வழங்காததால் வட்டாட்சியரிடம் மனு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 20 February 2023

கஜா புயலின் போது மின்சார வாரிய தொழிலாளர் மரம் முறிந்து இறந்தார் அரசு இதுவரை இழப்பீடு வழங்காததால் வட்டாட்சியரிடம் மனு


காட்டுமன்னார்கோயிலில் 2018   ஆண்டு ஏற்பட்ட  கஜா புயலின் போது மின்சார வாரிய தொழிலாளர் மரம்  முறிந்து  இறந்தார் அரசு இதுவரை இழப்பீடு வழங்காததால் வட்டாட்சியரிடம் மனு




கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் கீழக் கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சோமு என்கிற சோமசுந்தரம் இவருக்கு செல்வி என்ற மனைவியும் இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளைகளும் உள்ளது இந்த நிலையில் சோமசுந்தரம் காட்டுமன்னார்கோவில் மின்சார வாரியத்தில் இறப்பதற்கு முன்பு  15 வருட காலமாக ஒப்பந்த தொழிலாளியாக பணி செய்து வந்தார்


இந்த நிலையில் காட்டுமன்னார்கோயில் மின்சார வாரியத்தில் கிராமங்களில் மற்றும் கடைவீதிகளில் பணி இருந்தால் இவரை அனுப்பி உயர் அதிகாரிகள் சரி செய்து வரச் சொல்வார்கள் அதனை தொடர்ந்து அந்த பணியை அவர் செய்து வந்துள்ளார் 


இந்த நிலையில் கடந்த 16 11 2018 ஆண்டு தமிழகத்தில் மிகப்பெரிய கஜா புயல் தாக்கியது அதில் கடலூர் மாவட்டம் முழுவதும் கஜா புயல் வேகமாக வீசியது அப்பொழுது காட்டுமன்னார்கோவில் பகுதியில் நிறைய  கம்பங்கள் சாய்ந்து முறிந்தன மேலும் கிராமங்களில் உள்ள பல வகையான மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகின இதனால் ஆங்காங்கே மின்சார துறை மூலம் ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு சரி செய்ய பணி நடைபெற்றது அதில் கடந்த 17 11 2018 அன்று சோமசுந்தரம் வேலை செய்த மின்கம்பம் அடியோடு முறிந்து விழுந்து பலத்த காயமுற்றோர் நிலையில் அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர் 


பின்னர் அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது  

பின்னர் இது பற்றிய தகவல் காட்டுமன்னார்கோயில் முழுவதும் பரவியது உடனடியாக சம்பவ இடத்திற்கு சோமசுந்தரம் வீட்டு குடும்பத்தினர்  கதிரி அழுதனர்  சிஐடியு பொறுப்பாளர்களும்   


சம்பவ இடத்திற்கு வந்து சாவுக்கு காரணமான மின்சார துறையும் தமிழக அரசின் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்


பின்பு காட்டுமன்னார்கோயில் மின்சாரத் துறையும் காவல்துறையினர் வருவாய் துறை நிறம் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை செய்தனர் பேச்சுவார்த்தை உடனடியின் போது இறந்து போன சோமசுந்தரம் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் எஸ்டேட் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அப்போது பணியில் இருந்த வட்டாட்சியர் மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட துறை ரீதியான அதிகாரிகளுடன் கையொப்பம் பெற்று அவரது உடலை சோமசுந்தரம் உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்


ஆனால் இதனால் வரை  அந்த குடுப ம்திற்கு  அந்த நஷ்ட ஈடு தொகையும் அரசு வேலை வழங்கவில்லை இதனால் கடந்த 4 ஆண்டு காலமாக அந்த குடும்பம் கஷ்டப்பட்டு வருகிறது தமிழக முதல்வர் மற்றும் மின்சார துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் காட்டுமன்னார்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் வந்தனர் இதுவரை எந்த பலனும் அளிக்கவில்லை


தொடர்ந்து மனு கொடுத்து வருகிறார்கள் மேலும் சோமசுந்தரம் குடும்பம் குடிசை வீட்டில் வசித்து வாழ்ந்து வருகிறார்கள் இதனை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் இறந்து போன சோமசுந்தரம் குடும்பத்திற்கு ஒரு அரசு வேலையும் அதிகாரிகள் ஒப்புதல் அளித்தபடி 25 லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்

No comments:

Post a Comment

*/