காட்டுமன்னார்கோவில் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 40 மாணவர்களுக்கு ஒவ்வாமை, அரிப்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கொண்டசமுத்திரம் கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள டிஇ எல்சி உதவிபெறும் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 40 மாணவர்களுக்கு அனைவருக்குமே கடுமையான அரிப்பு ஏற்பட்டுள்ளது. மதியம் ஒரு மணி அளவில் பள்ளியில் மாணவர்களுக்கு மதியம் பருப்பு சாதம் வழங்கப்பட்டது.
இதனை சாப்பிட்ட மாணவர்கள் பள்ளியிலேயே அமர்ந்து பாடம் படித்து வந்துள்ளனர் பின்பு அவர்களுக்கு அரிப்பு ஏற்பட்டது. இது குறித்து மாணவர்கள் பள்ளியில் உள்ளவர்களிடம் தெரிவித்த போது மாணவர்களை வீட்டுக்கு சென்று குளித்துவிட்டு வாருங்கள் என்று சொல்லியுள்ளனர் அப்போது மாணவர்கள் வீட்டிற்கு சென்று இதனை பெற்றோர்களிடம் தெரிவித்து நன்றாக குளித்து மஞ்சள் சோப்பு போட்டு தேய்த்து குளித்த பின்பும் அவர்களுக்கு அதிகளவில் அரிப்பு வர ஆரம்பித்துள்ளது.
இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்த போது பள்ளி நிர்வாகத்தின் சார்பில் யாரும் இல்லாததால் மாணவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் முயற்சி இறங்கினர்.பரபரப்பு ஏற்பட்டது. கொண்ட சமுத்திரம் பெரிய தெருவில் உள்ள பள்ளி மாணவர்கள் எப்போதும் தாங்கள் படிக்கும் இந்த பள்ளியிலேயே தான் மதிய உணவை சாப்பிட்டு வருவது வழக்கம். இன்றும் அது போல் சாப்பிட்டு உள்ள நிலையில் அவர்களுக்கு அரிப்பு ஏற்பட்டுள்ளது என்பது என்ன காரணத்தினால் என்பது தெரியாமல் மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும குழப்பம் அடைந்து பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் மாணவர்களை ஆம்புலன்ஸ்
மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாணவர்களை முழுமையாக பரிசோதித்தால் மட்டுமே முழுமையான விவரம் தெரிய வரும் எனவும் பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது . முக்கியமாக மாணவர்களும் மாணவர்கள் பெற்றோர்களும் மதிய உணவு சாப்பிட்ட பின்பு தான் இவ்வாறு ஏற்பட்டதாக தெரிவித்து வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
செய்தியாளர் கே.பாலமுருகன் காட்டுமன்னார்கோயில்
No comments:
Post a Comment