சேத்தியாத்தோப்பு கருப்பசாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு1008 திருவிளக்கு மற்றும் சுமங்கலி பூஜை. பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு, விநாயகபுரம் கருப்பசாமி கோவிலில் சக்தி வாய்ந்த மாசி மாத அமாவாசையை முன்னிட்டு
22 ஆம் ஆண்டு 1008 திரு விளக்கு மற்றும் சுமங்கலி பூஜை நடைபெற்றது. பெண்கள் மாங்கல்ய பலம் பெற்று அவர்கள் சிறப்பான வாழ்க்கை அமைந்திடவும், உள்ளத்திலும், இல்லத்திலும் படிந்துள்ள இருளை அகற்றி, பொருளாதார தடையற்ற நல்வாழ்வு அமைந்திடவும் இந்த சுமங்கலி மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.பூஜைகளுக்கான திருவிளக்கு, பூஜை பொருட்களுடன்
தமிழகமெங்குமிருந்து வருகை தந்த பக்தர்கள் மூலவர் கருப்பசாமி மற்றும் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்து அருள் பாலித்த அங்காள பரமேஸ்வரி அம்மனையும் வணங்கி திருவிளக்கு மற்றும் சுமங்கலி பூஜையில் பங்கேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
No comments:
Post a Comment