கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே நத்தமேடு கிராமத்தில் இருந்தும், அருகில் உள்ள கும்முடி மூலை கிராமத்தில் இருந்தும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் குறிஞ்சிப்பாடி பகுதிக்கு படிக்க செல்கின்றனர். அவ்வாறு படிக்கச் சென்ற மாணவர்கள் அரசு பேருந்தில் வரும்போது எதிர்பாராமல் வாய் தகராறு, கைகலப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில் இந்த சண்டையில் ஈடுபட்டது குமடிமூலை ஆயிகுளம் பகுதி மாணவர்கள் தான் என நினைத்து குமூடிமூலை பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தில் வந்த போது நத்தமேடு மாணவர்கள் பேருந்தை வழிமறித்து அவர்களை கீழே இறங்கச் செய்தபோது அவர்களை ஆபாசமாக திட்டியும் கொலை மிரட்டல் விடுத்தும் நத்தமேடு மாணவர்கள் தாக்குகின்றனர். அதில் ஒரு மாணவருக்கு காயம் ஏற்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து காயம் பட்ட மாணவர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் மருதூர் போலீசார் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அதில் ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்த சண்டையில் ஈடுபட்ட மாணவர்கள் 10 ,11ஆம் வகுப்பு மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆவார்கள் என்று குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment