மேலும் கிண்டி வாய்க்கால் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு செடி கொடி முள் பெயர் தெரியாத மரங்கள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது
மேலும் அப்பகுதி விவசாயி ஒருவர் வாய்க்காலை மறைத்து கட்டிட பணிகளும் செய்து வருகிறார் இதனால் அப்பகுதி விவசாயிகள் அருகில் உள்ள வயல்களுக்கு செல்ல பாதை வசதி இல்லாமல் அவதி அடைந்து வருகிறார்கள்
மேலும் அப்பகுதி விவசாயி கூறுகையில் இந்த வாய்க்காலை முழுமையாக தூர்வாரி இருபுறமும் வண்டி செல்வதற்கு சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் எனவும் ஆக்கிரமிப்பு அகற்றி கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் அருகில் இங்கு உள்ள வயல்களுக்கு உலர் கலம் அமைத்து தர வேண்டியம் கோரிக்கை வைத்துள்ளனர்
சரியான முறையில் பாதை வசதி இல்லாததால் தற்பொழுது தனி நபருக்கு சொந்தமான இடத்தின் வழியாக அறுவடை செய்து நெல் பயிர்களை வீட்டிற்கு கொண்டு வருகின்றோம் அந்த இடத்தின் உரிமையாளர் அப்பகுதியில் வீடு கட்டுவதால் தற்போது அந்த வழியும் கிடைக்கவில்லை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிண்டி வாய்க்காலை முழுமையாக தூர்வாரி வீராணம் ஏரி கரையில் இருந்து கடைமடை வரை பாதை வசதி செய்து ஆக்கிரமிப்பை அகற்றி கொடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்
செய்தியாளர் கே. பாலமுருகன் காட்டுமன்னார்கோயில்
No comments:
Post a Comment