வேப்பூர் அடுத்த காட்டுமயிலூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 10 February 2023

வேப்பூர் அடுத்த காட்டுமயிலூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

வேப்பூர் அடுத்த காட்டுமயிலூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி, ஆத்மா குழு தலைவர்  தொடங்கி வைத்தார் கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியம், காட்டுமைலூர் ஊராட்சியில்  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது


காட்டுமைலூர் சிவன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நல்லூர் ஒன்றிய அட்மா குழு தலைவரும் ,திமுக ஒன்றிய செயலாளருமான  பாவாடை கோவிந்தசாமி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

நல்லூர்  ஒன்றிய திமுக  அவைத் தலைவர் கருப்பையா, ஊராட்சி தலைவர் மகேஸ்வரி அன்புநிதி,  முன்னிலை வகித்தனர். 


நல்லூர் ஒன்றிய சத்துணவு திட்ட அலுவலர் யோஜனா வள்ளி வரவேற்றார் 


வி.சி.க.மாவட்ட துணைச் செயலர் திராவிடமணி, தி.மு.க., ஒன்றிய துணைச் செயலர் அன்புக்குமரன், மாவட்ட பிரதிநிதி சேகர், இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர்கள் பாபு, தனசேகர், ஊராட்சி மன்ற தலைவர்கள் பெரியநெசலூர் மண்ணாங்கட்டி, கீழக்குறிச்சி ராணி முருகேசன்  உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், கர்ப்பிணிகளுக்கு மாலை, வளையல் அணிவித்து  நலுங்கு வைத்து தாம்பூல தட்டில் புடவை, பழ வகைகள், சத்தான உணவுப் பொருட்களை வைத்து சீர்வரிசை வழங்கப்பட்டது.


 மேலும், கர்ப்ப காலத்திலும், பாலூட்டும் காலத்திலும் சாப்பிட வேண்டிய சத்தான உணவுப் பொருட்கள் குறித்து வழிமுறைகள் கூறினார்கள்

No comments:

Post a Comment