கடலூர் மாவட்டம், வடலூர் வாகீசம்பிள்ளை நகர் கல்கத்தா சாலையில் வசிப்பவர் வேலு இவர் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி வயது 55 சம்பவத்தன்று வேலு மற்றும் அவரது மனைவியும் இருவரும் தனது சொந்த ஊரான ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டையில் பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களை பார்ப்பதற்காக வீட்டின் கதவை பூட்டி விட்டு சென்றுள்ளனர். மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்து போது பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 5பவுன் நகை, 14,000பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து வடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிந்து இருந்த ரேகைகளை சேகரிக்கப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment