சாத்தியம் கிராம மக்கள் குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் நல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை
கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியம் வேப்பூர் அடுத்த சாத்தியம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள பெருமாள் கோவில் அருகே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போர்வெல் அமைத்து மினி டேங்க் மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன் போர்வெல் பழுதடைந்ததால் குடிநீர் தடைப்பட்டது. அதனால் பொதுமக்கள் அதே இடத்தில் புதிய போர்வெல் அமைக்க கோரியதால் ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
அங்கு போர்வெல் அமைக்க ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து கோவில் சுற்றுச்சுவரை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், புதிய போர்வெல் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது இதனால், கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த. சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பிப்ரவரி 9- ந் தேதி பகல் 12:00 மணியளவில் காலி குடங்களுடன் ஊர்வலமாக வந்து நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனையறிந்த நல்லூர் பி.டி.ஓ., ஜெயக்குமாரி சமரச பேச்சில் ஈடுபட்டார். அதில், கோரிக்கை மனுக்களை பெற்று, கிராம மக்களிடம் விருப்பப்படி அதே இடத்தில் ஒரு வாரத்திற்குள் புதிய போர்வெல்ப அமைக்கப்படும் என உறுதி கூறினார்.
அதனை தொடர்ந்து 12:45 மணியளவில் அனைவரும் கலந்து சென்றனர். இதனால், நல்லூர் ஒன்றிய அலுவலக பகுதியில் பரபரப்பு நிலவியது.
No comments:
Post a Comment