கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உணவகம் மற்றும் இனிப்பக வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு முகாம் உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் தலைமையில் விருதை ஹோட்டல் ஸ்வீட் & பேக்கரி உரிமையாளர் சங்கம் சார்பில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு முகாமில் தங்கள் கடைகளுக்கான உரிமம் இல்லாதவர்கள் உடனடியாக உரிமம் எடுக்கவேண்டும், செய்தி தாள்களில் தின்பண்டங்களை விநியோகம் செய்யக்கூடாது, பேக்கிங் செய்யப்பட்ட தின்பண்டங்கள் மீது தேதி ஒட்டப்பட்ட வேண்டும், இனிப்பு மற்றும் மாமிச உணவுகள் மீது வண்ண நிறமிகளை சேர்க்கக்கூடாது. ஒருமுறை உணவு தயாரித்த எண்ணெய்களை மறுமுறை தயாரிக்கும் போது அதே எண்ணையை பயன்படுத்த கூடாது, சமையலறை மற்றும் பரிமாறும் இடங்களில் முடி உதிராமல் இருக்க கட்டாயம் தலை மற்றும் கைக்கவசம் அணிய வேண்டும் என்றும் வியாபாரிகளை வலியுறுத்தினார்.
மேலும் தேவையில்லாத பாலித்தின் பேப்பர்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட வியாபாரிகளின் சந்தேகங்கள் குறித்த கேள்விகளுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் பதில் கூறி தெளிவுபடுத்தினார்.
இதில் விருதை ஹோட்டல் ஸ்வீட் & பேக்கரி உரிமையாளர் சங்கத் தலைவர் அய்யர்பவன் சிவக்குமார், செயலாளர் அபிதா பழக்கடை சதீஷ், பொருளாளர் முத்துலட்சுமி ஸ்வீட் முத்துசாமி உட்பட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment