டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிஸ்சோடியாவை கைது செய்த பாஜக அரசை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் தேவகுமார் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவர் மற்றும் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அவர்களை கைது செய்த பாஜக ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மாவட்ட ஆம் ஆத்மி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்டம் சார்பில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் கிங்ஸ்டர், பாக்யராஜ், பத்மநாதன், மற்றும் கடலூர் மாவட்ட மேற்கு மகளிர் அணி தலைவி கௌரி பாபு ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் இளையமதிஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் அவர்கள் ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து ஓடடுக்காதே ஒடுக்காதே கல்வியை ஒடுக்காதே திணிக்காதே திணிக்காதே பொய் வழக்குகளை திணிக்காதே மற்றும்அதானி அரசை கண்டிக்கிறோம் அம்பானி அரசை கண்டிக்கிறோம் பொய் வழக்குகளுக்கு ஆம் ஆத்மி கட்சி பயப்படாது பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்ட டில்லி துணை முதல்வரை விடுதலை செய் என்ற கோஷத்துடன் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
No comments:
Post a Comment