வடலூர் புதுநகர் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் வடலூர் புதுநகர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களின் அறிவுறுத்தலின்படி கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைக்க பூமி பூஜையை மாவட்ட கல்வி குழு தலைவரும் திமுக ஒன்றிய செயலாளர் பொறியாளர் வீ.சிவகுமார் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வடலூர் நகர்மன்ற தலைவர் சு.சிவக்குமார் திமுக நகர செயலாளர் தன.தமிழ்ச்செல்வன் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உறுப்பினர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உதவி ஆசிரியர்கள் பெற்றோர்கள் பள்ளி மாணவர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment