தமிழக அரசின் நிதி ஒதுக்கீட்டில் திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் அரசு தொடக்கப்பள்ளியில் இருந்த 2 கட்டடங்களும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தது. மாணவர்களுக்காக கடந்த ஓராண்டாக அருகிலுள்ள வட்டார வளமையம் பள்ளி வகுப்பறையாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 64 இலட்சம் செலவில் 2 வகுப்பறைக் கட்டிடங்கள் இரண்டு கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பூமிபூஜை பள்ளி வளாகத்தில் நடந்தது. மங்களூர் ஒன்றிய பெருந்தலைவர் சுகுணாசங்கர் தலைமை தாங்கினார். பள்ளித் தலைமையாசிரியர் சாந்தி அனைவரையும் வரவேற்றார். மங்களூர் வட்டாரக்கல்வி அலுவலர் மாதம்மாள், மங்களூர் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் , இடைச்செருவாய் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன், கீழச்செருவாய் தலைவர் - இரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பூமி பூஜை நடத்தப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. விழாவில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் துரை செல்வராசு, துணைத்தலைவர் வெங்கடேசன், பள்ளி ஆசிரியர்கள் சரண்யா, வழியரசன் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி உதவியாசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment