விருத்தாசலம் அருகே கோ.ஆதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 February 2023

விருத்தாசலம் அருகே கோ.ஆதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா.

விருத்தாசலம் அருகே கோ.ஆதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோ. ஆதனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா, புனரமைக்கப்பட்ட வகுப்பறைகள் திறப்பு விழா, மற்றும் விளையாட்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. இப்பள்ளி விழாவில் தலைமை ஆசிரியர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் துரை பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்று கல்வியின் மேன்மை குறித்து,கல்வி கற்பதன் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார். 


பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். முன்னதாக, பள்ளியில் புனரமைக்கப்பட்ட வகுப்பறைகளை விருத்தாசலம் ஜெயின் ஜுவல்லரி நிறுவனர் அகர்சந்த் திறந்து வைத்தார்.அதன் பிறகு,அதன் பிறகு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தியாகராஜன் எஸ் எம் சி தலைவர் சத்யா உதவி தலைமை ஆசிரியர் சித்ரா புவியியல் பட்டதாரி ஆசிரியர் காவல் துறை உதவி ஆய்வாளர் டைமன் துரை கம்மாபுரம் ஒன்றியம் வட்டார மேற்பார்வையாளர் செந்தில் குமார் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி சமூக ஆர்வலர்கள் இளவரசன் ராஜ.தன பாண்டியன் ராஜசேகர் பிச்சப்பிள்ளை சுந்தரமூர்த்தி ஆறுமுகம் ராஜேந்திரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சஞ்சராவ் கலைமணி ஜெயப்பிரகாஷ் கீதா ஜெயச்சந்திரன் ஷீலா தேவி சங்கீதா செல்வராணி கலைவாணி ஜோஸ்பின் நூர்ஜகான் தேன்மொழியை விஜயலட்சுமி அஞ்சலி சக்திவேல் ஆரோக்கிய ஜெயராஜ் ராஜலட்சுமி கலைவாணி அன்பு ராணி மணிமாலா ஆகியோர் கலந்து கொண்டனர் நன்றியுரை தமிழ் பட்டதாரி ஆசிரியர் பழனியில் வழங்கினார். நிகழ்ச்சியை அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சந்திரகுமார் தொகுத்து வழங்கினார்.

No comments:

Post a Comment