விருத்தாசலம் பாலக்கரையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 February 2023

விருத்தாசலம் பாலக்கரையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

விருத்தாசலம் பாலக்கரையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.


விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் கிராமத்தில் கடந்த மாதம் காணும் பொங்கல் அன்று தலித் இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் அதே கிராமத்தில் இறந்து போன முதியவர் கோதண்டம் என்பவரின் பெயரில் கருவேப்பிலங்குறிச்சி காவல் துறையினர் பொய் வழக்கு போட்டதை கண்டித்தும் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு சட்டப்படி உரிய இழப்பீடு வழங்கிடவும் தலித் பகுதினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற கோரியும், 




இறந்து போன கோதண்டம் மீது பொய் வழக்கு போட்ட காவல் விசாரணை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட குழு உறுப்பினர் செந்தில் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ் மற்றும் ரமேஷ் பாபு கண்டன உரை நிகழ்த்தினார். 




வட்டத் தலைவர் கோவிந்தன் சிஐடியு மாவட்ட குழு பெரியசாமி மாதர் சங்கம் வட்டக்குழு சத்யா கவிதா மாவட்ட செயலாளர் பழ. வாஞ்சிநாதன் மாவட்டத் தலைவர் ராஜேஷ் கண்ணன் சி ஐ டி யு மாவட்ட தலைவர் கருப்பையன் வட்ட செயலாளர் சி பி எம் அசோகன் மாவட்ட குழு சிபிஎம் கலைச்செல்வன் கலந்து கொண்டனர். சி ஐ டி யு தலைவர் மார்க்கெட் சேகர் நன்றியுரை வழங்கினார்.



இக்கண்டனா ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாணவர் சங்கம் மற்றும் சாத்தக்கூடல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

No comments:

Post a Comment

*/