புவனகிரி பங்களா பேருந்து நிறுத்தமருகே மின்விளக்கு இல்லாமல் இருளடைந்துள்ளது. உயர் கோபுர மின்விளக்கு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
கடலூர் மாவட்டம் புவனகிரி பங்களா பேருந்து நிறுத்தம் அருகில் மூன்று சாலைகள் சந்திக்கும் மிக முக்கியமானப்பகுதியாக இருந்துவருகிறது. அதிக வாகனப் போக்குவரத்து நிறைந்த பகுதியாகவும் உள்ளது. இரவு நேரங்களில் உயர் கோபுர மின்விளக்கு இல்லாததால் வெளிச்சம் இல்லாமல் இருளடைந்து வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். அதிக விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. மேலும் இப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவுக்கு போதுமான வெளிச்சம் இல்லாத நிலையால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் போது சரியான நபரை அடையாளம் காண முடியாத நிலை ஏற்படுகிறது.
உடனடியாக புவனகிரி பங்களாப் பேருந்து நிறுத்தப் பகுதியில் உயர் கோபுரமின் விளக்கு அமைக்க வேண்டும் என்பது இப்பகுதியினர் வைத்து வரும் முக்கியமான கோரிக்கையாக இருக்கிறது..
No comments:
Post a Comment