குறிஞ்சிப்பாடியில் தையல் கலைஞர்கள் தின விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 27 February 2023

குறிஞ்சிப்பாடியில் தையல் கலைஞர்கள் தின விழா.

குறிஞ்சிப்பாடியில் தையல் கலைஞர்கள் தின விழா. 


கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் தையல் கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் குறிஞ்சிப்பாடி கிளை தலைவர் சிங்காரவேல் தலைமை தாங்கினார்.


மூத்த கலைஞர் ரகோத்தமன் அவர்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் மீன் மார்க்கெட் பெருமாத்தூரான் வீதி வழியாக ஊர்வலமாக பேருந்து நிலையம் வந்தடைந்து எம்ஜிஆர் சிலை அருகில் உள்ள தையல் கலைஞர்கள் சங்க கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. 


நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைத் தலைவர் அஜீஸ்கான் கலந்து கொண்டார். கிளை சங்க நிர்வாகிகள் செயலாளர் ராமலிங்கம் பொருளாளர் ஜோதி முருகன் செயற்குழு உறுப்பினர்கள் சீனு வேலு சேகர் அசோக் பழனிவேல் பெருமாள் மூர்த்தி சுரேஷ் வெங்கடேசன் மகளிர் அணி லில்லி தேவி ராஜு ரஞ்சிதா ரேணுகாதேவி மேகலா மற்றும் அனைத்து தையல் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/