கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே மருதூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று உலகிற்கு எடுத்துரைத்த வள்ளலார் அவதார இல்லம் அமைந்துள்ளது. இங்கு வடலூரில் சத்திய ஞான சபையில் 152 வது தைப்பூச விழா ஜோதி தரிசனத்தை கண்டு தரிசனம் செய்து வரும் பக்தர்கள், மருதூர் கிராமத்தில் வந்து அவதார இல்லத்தில் உள்ள அணையா தீபத்தையும், பாதாள அறையில் உள்ள வள்ளலாரின் தாய், தந்தை, வள்ளலாரின் குழந்தைப் பிராயத்து சிலை ஆகியவற்றையும் தினம்தோறும் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தைப்பூச விழாவை முன்னிட்டு இன்று காலை கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.பாலசுப்பிரமணியன் அவர்கள் வள்ளலார் அவதரித்த இல்லத்தில் சாமி தரிசனம் செய்தார் மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து சன்மார்க்கப் பாராயணம், திருவருட்பா, உள்ளிட்ட பல்வேறு வள்ளலாரின் சொற்பொழிவுகள் பாராயணம் சன்மார்க்க அன்பர்கள் ஜோதி தரிசனம் காண்பித்து கௌரவத்தினர்.
அதே நேரத்தில் இந்த விழாவில் தொடர்ச்சியாகமாவட்ட ஆட்சியர் கோவிலின் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மருதூர் ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு வழங்கும் அரிசி மற்றும் கோதுமை பருப்பு வகைகள் குறித்து தரமாக உள்ளதா என்று பொதுமக்களிடத்தில் கேட்டறிந்து இருப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து இலவச வேஷ்டி சேலைகளை வழங்கினார் நிகழ்ச்சியில் மருதூர் கிராம நிர்வாக அலுவலர் குருமூர்த்தி கிராம நிர்வாக உதவியாளர் பானுமதி ஊராட்சி செயலாளர் பழனி இளங்கோவன் கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு நியாய விலைக் கடை ஊழியர் ராஜேந்திரன் மற்றும் வருவாய்த் துறை ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment