ஆந்திராவுக்கு கரும்பு வெட்ட சென்றவர் பிணமாக திரும்பி வந்தார் ; குடும்பத்தினர் அதிர்ச்சி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 February 2023

ஆந்திராவுக்கு கரும்பு வெட்ட சென்றவர் பிணமாக திரும்பி வந்தார் ; குடும்பத்தினர் அதிர்ச்சி

ஆந்திராவுக்கு கரும்பு வெட்ட சென்றவர் பிணமாக திரும்பி வந்தார் ; குடும்பத்தினர் அதிர்ச்சிகடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டாலின் தந்தை பெ/ அரிகிருஷ்ணன் வயது (38). என்பவர் சில தினங்களுக்கு முன்பு ஆந்திராவுக்கு  கரும்பு வெட்ட சென்றார். இவரைப் போலவே கடலூர் மாவட்டத்தில்உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூலி தொழிலாளிகள் கரும்பு வெட்ட சென்றுள்ளனர் . அப்போது அங்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கரும்பு வெட்டும் பணியும் மேற்கொண்ட ஸ்டாலின் தினமும் வீட்டில் உள்ள மனைவியிடமும், பிள்ளைகளிடம் போனில் பேசி வந்துள்ளார் அனைத்தும் நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் கடந்த பல நாட்களாக ஸ்டாலினிடம் இருந்து போன் தொடர்பு இல்லாத நிலையில் குடும்பத்தினர் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வேதனையில் ஆழ்ந்தனர்.


திடீரென   அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் வெள்ளை நிற ஓன் போர்டு  ஒரு காரில் முகம் தெரியாத நபர்கள்  சிலர் ஸ்டாலின் பிரேதத்தை எடுத்து வந்து  அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அவர் வீட்டிற்கு பிணமாக திரும்பியதை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி வருகின்றனர். இதனால் கிராமமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
கரும்பு வெட்ட சென்ற வாலிபர் பிணமாக திரும்பியது கண்டு அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர் இறப்பில் சந்தேகம் உள்ளது என்று கூறி வருகின்றனர். இது தொடர்பாக ஸ்டாலினின் மனைவி சங்கீதா வயது 32 என்பவர் மருதூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் புகாரை பெற்றுக் கொண்ட மருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

No comments:

Post a Comment