ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 February 2023

ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கி.பாலசுப்ரமணியம், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆயிக்குப்பம் ஊராட்சியில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் நாடக மேடை கட்டுமான பணி நடைபெறுவதையும், 15 வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.14.5 இலட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல் நிலை நீர் தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளதையும், அப்பகுதியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், 
மேலும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நீர் உறிஞ்சிக்குழி அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுப்ரமணியபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் சுப்ரமணியபுரம் நியாயவிலைக் கடையில் பொருட்களின் விற்பனை மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்து, பொதுமக்களிடம் நியாயவிலைக் கடையில் பொருட்கள் சரிவர வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

தொடர்ந்து தொண்டமாநத்தம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் எஸ்.என்.நகர் வாய்க்கால் தூர்வாரி கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெறுவதை பார்வையிட்டு, பணியாளர்களின் வருகைப்பதிவேட்டினை ஆய்வு செய்தார்.


முன்னதாக கருங்குழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் கருங்குழி நியாயவிலைக்கடை மற்றும் தென்கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் இயங்கும் மருதூர் நியாயவிலைக் கடையிலும் பொருட்களின் விற்பனை மற்றும் இருப்பு குறித்து ஆய்வுசெய்து, அப்பகுதி பொதுமக்களிடம் நியாயவிலை க்கடையில் பொருட்கள் சரிவர வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.



இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்

No comments:

Post a Comment

*/