என்எல்சி விவகாரத்தில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்திடம் மனு கொடுக்க வந்த பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி வீராணம் மாளிகையில் என்எல்சி நிலம் ,மனை கையகப்படுத்துவது தொடர்பாக கத்தாழை, வளையமாதேவி, கம்மாபுரம், கரிவெட்டி உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகளோடு அதிகாரிகள், திமுக அமைச்சர் இணைந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக்கூட்டம் திமுக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தின் தலைமையில், மாவட்ட ஆட்சியர், காவல்துணை கண்காணிப்பாளர், என்எல்சி உயர் அதிகாரிகள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் முன்னிலையில் என்எல்சி நிலம் ,மனை கையகப்படுத்துவது மற்றும் இழப்பீடு வழங்குவது தொடர்பாக பல மணி நேரமாக நடைபெற்றது. இதில் விவசாயிகள், கிராம மக்கள் வைத்த கோரிக்கையான ஏக்கருக்கு ஒரு கோடி இழப்பீடு, நிரந்தர அரசு வேலை உள்ளிட்ட எந்த கோரிக்கையையும் பேச்சு வார்த்தைக்கு வந்த திமுக அமைச்சரும், அதிகாரிகளும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் விவசாயிகளும்,கிராம மக்களும் முன்வைத்த ஏற்றுக் கொள்ளாத ஒரு தீர்வை, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து பேச்சுவார்த்தைக்கு சென்ற விவசாயிகளும் கிராம பொதுமக்களும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியாக வெளியேறினர். இந்நிலையில் இது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த பாமகவினர் ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டதால் அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டனமுழக்கங்களையும் எழுப்பினர்.
அப்போது, சென்ற ஆட்சியில் ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு, விவசாயிகளுக்கு நிரந்தர அ,ரசு வேலை என்று போராடிய திமுக அமைச்சர் இன்று ஆட்சி மாறியதால் காட்சியும் மாறி விட்டது என்றுகூறி அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்ப கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டனர். இதனால் பூதங்குடி சேத்தியாத்தோப்புபகுதியில் நேற்றைய தினம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment