கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். இதில் பல மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ வீடு இல்லை இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மாற்று திறனாளிகள் இலவச மனை பட்டா வழங்க வலியுறுத்தி பல கட்டங்களாக மனு அளித்தும் பலவித போராட்டங்கள் செய்தும் இதுவரை தங்களுக்கு எந்த ஒரு பயனும் கிடைக்கவில்லை என்றும் வாழ வழியின்றி தவிக்கும் எங்களுக்கு அரசாங்கம் ஒதுக்கப்பட்ட இடத்தில் மனைபட்டா வழங்க வட்டாட்சியர் அந்தோனி ராஜ் அவர்களிடம் சங்க தலைவர் சையத் முஸ்தபா தலைமையில் 70க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் மனு அளித்தனர்.
இதில் செயலாளர் சுப்புராயன், பொருளாளர் குமரவேல் முன்னிலை வகித்தனர். உடன் துணைத் தலைவர் கார்த்திகேயன், துணைச் செயலாளர் முகமது ஷரீப் மற்றும் உறுப்பினர்கள் ராஜசேகர் சம்பத் பாலசந்தர் விருத்தாசலம் பகுதி பொறுப்பாளர் சாந்தகுமார் மற்றும் அமுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment