மேலும் எங்கள் ஊராட்சியில் நடைபெறும் பிரச்சனைகள் குறித்து மற்ற ஊராட்சி மன்ற கூட்டமைப்பு சார்பாக எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊராட்சி பணிகள் போன்ற வேலைகளுக்கு தனக்கு விருப்பப்பட்ட ஆட்களை வைத்து பணி செய்கிறார்கள், அது சம்பந்தமாக தீர்மானமாக அல்லது விவரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை, ஊராட்சி நடைபெறும் பணிகள் குறித்து தலைவரிடம் கேட்டால் அதற்கு சரியான பதில் தரவில்லை மேலும் மாதாந்திர கூட்டம் இதுவரை நடத்தாமல் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதை கண்டித்து எங்கள் வார்டு உறுப்பினர் பதவியை கூண்டோடு நாங்கள் ராஜினாமா செய்கிறோம் என்று கூறி, சீனிவாசன் சுமதி தட்சிணவள்ளி சிவகாமி இளவரசி தீபா உள்ளிட்ட ஆறு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் விருத்தாசலம் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் இன்பாவிடம் மனு அளித்தனர்.
மனு மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் கூறியதன் பேரில் வார்டு உறுப்பினர்கள் அங்கிருந்து சென்றனர்.
No comments:
Post a Comment