கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஊத்தங்கல் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு வள்ளி தெய்வயானை உடனுறை தணிகைவேல் முருகன் ஆலயம் மற்றும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த 47 அடி உயர ஊத்தங்கால் முருகன் திருச்சிலை அஷ்டபந்த மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 12ம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் லட்சுமி ஹோமம், நிகழ்வுடன் தொடங்கிய இந்நிகழ்வானது ஐந்தாம் நாளான நேற்று மங்கல இசை விக்னேஸ்வர பூஜை ஆறாம் கால யாக பூஜை மூல மந்திர ஹோமத்துடன் இன்று யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் வைக்கப்பட்டிருந்த கலசத்தை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கள இசை முழங்க சிவாச்சாரியார் அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை தணிகைவேல் முருகன் ஆலயம் மற்றும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் 47 அடி உயரம் கொண்ட ஊத்தங்கால் முருகன் திருச்சிலை அஷ்டபந்த மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த ஊத்தங்கால் கிராமத்தில் தணிகைவேல் முருகன் ஆலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் 47 அடி உயரம் கொண்ட முருகன் திருச்சிலை அஷ்டபந்த மகா கும்பாபிஷேகம்.
No comments:
Post a Comment