கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் மருதூர் கிராமத்தில் தங்கி வேளாண் பணி அனுபவம் குறித்து களப்பணி மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவி அன்னக்கிளி பிரகாஷ் தலைமை தாங்கினார். அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் இணைப்பேராசிரியர் டாக்டர் வி.சக்திவேல் அவர்கள் கலந்து கொண்டு இவ்விழாவினைத் துவக்கி வைத்துப் பேசினார். நிகழ்ச்சியில் வேளாண் B7 குழுத் தலைவன் கிருபாகரன். வரவேற்புரை ஆற்றினார்
இதில் சிறப்பு விருந்தினர்களாக மருதூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சி.தமிழ்செல்வன் மற்றும் உதவி வேளாண் அலுவலர் வண்டராயண்பட்டு திரு.ரமேஷ் கலந்து கொண்டு வேளாண்மையின் முக்கியத்துவத்தை குறித்தும் எடுத்துரைத்தனர் இயற்கை வேளாண்மை அமைப்பு பற்றி வேளாண் B-7 மாணவர்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.
இறுதி நிகழ்வாக விழாவில் கலந்து கொண்ட அணைவருக்கும் வேளாண் இறுதி ஆண்டு மாணவர்கள் மரகன்றுகள் வழங்கினர்.
No comments:
Post a Comment