நல்லூரில் மகாத்மா காந்தி ஊராக வேலை திட்டத்தில் நிதி குறைப்பு செய்த மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டம்.
கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தும் மகாத்மா காந்தி ஊராக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் இதுவரை வழங்கபட்டு வந்த நிதியில் சுமார் 31 சதவிகித நிதியினை மத்திய அரசு குறைத்துவிட்டதை கண்டித்தும் , ஏற்கனவே செய்யப்பட்ட பணிகளுக்கான நிதியை வழங்க கோரி ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்பாட்த்திற்கு மாவட்ட துணை தலைவர் சரவணன் தலைமை தாங்கினார், மாவட்ட துணை செயலாளர் உதயகுமார் முன்னிலையில் நடைபெற்றது
ஆர்பாட்டத்தில் வட்டார தலைவர் செந்தில்குமார், வட்டார செயலாளர் திருநீலமணிகண்டன், செயற்குழு உறுப்பினர் ஞானவேல் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment