கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு நல்லூர் ஒன்றிய தலைவர் சுமதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கலையரசி வரவேற்றார்.
ஒன்றிய இணை செயலாளர் மணிமேகலை, கவிதா கலைச்செல்வி, கணேசன், சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் மணித்தேவன், மற்றும் நாகசூர்யா ஆகியோர் கலந்து கொண்டு சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதந்தோறும் 6750 ரூபாய் சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும், அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் 50 சதவிகித பணியிடங்களை சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், பள்ளி மாணவர்களுக்கு வழங்க உள்ள காலை சிற்றுண்டி திட்டத்தை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட்டு சத்துணவு திட்டத்தில் இணைக்கவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இறுதியாக நல்லூர் ஒன்றிய நிர்வாகி நல்லதம்பி நன்றி கூறினார்
No comments:
Post a Comment