காவல் நிலையத்தில் மரணமடைந்த சுப்ரமண்யன் மனைவி கடலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 February 2023

காவல் நிலையத்தில் மரணமடைந்த சுப்ரமண்யன் மனைவி கடலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு

நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் மரணமடைந்த சுப்ரமண்யன் மனைவி ரேவதி கடலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு அளித்தார் அம்மனுவில் கூறியிருப்பதாவது. 


கடலூர் மாவட்டம் பி.என்.பாளையம் கிராமத்தை சேர்ந்த எனது கணவர் சுப்பிரமணி கடந்த 29.02.2015 அன்று நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் காவல்துறை ஆய்வாளர் ராஜா மற்றும் காவலர்களால் சித்திரவதை செய்து அடித்து கொல்லப்பட்டார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்களின் போராட்டத்தின் விளைவாக நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 174 என வழக்கு பதிவு செய்யப்பட்டது. 


பின்னர் மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவுவாக இந்த வழக்கு CBCIDக்கு மாற்றம் செய்யப்பட்டது. CBCID விசாரணையின் இறுதியில் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் செந்தில்வேல், காவலர் சௌமியன் மூன்று பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு இது கொலையாகாத மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்கில் இருந்து தப்பிக்க ஆய்வாளர் ராஜா தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் கட்சி தலைவர்கள் மூலமும், பிற முக்கிய நபர்கள் மூலமும், புகார்மனுதாரரான எனக்கு பல்வேறு நெருக்கடிகளும், பிரச்சனைகளும் கொடுத்து வந்தனர். மேலும் ராஜா உள்ளிட்ட குற்றவாளிகள் ஆதித்தனார் ஆஜராகாமல் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் காலம் தாழ்த்தி வந்தனர்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர்கள் மூலம் சென்னை உயர்நீதிமன்றம் சென்று கடந்த 2018 குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றச்சாட்டைகளையும் போது வழக்கு நடத்தும் நீதிமன்றமே முகாந்திரம் இருந்தால், கொலை மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை வழக்காக மாற்றிக் கொள்ளலாம் என தீர்ப்பு பெறப்பட்டு, கடலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.


கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த மனுவின் மீது விசாரணையில் 22.08.2022-ம் தேதி அன்று குற்றம்சாட்டப்பட்ட ஆய்வாளர் ராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்வேல், காவலர் சௌமியன் மீது கொலை மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவுகள் மாற்றம் செய்யப்பட்டு கடலூர் மாவட்ட சிறப்பு எஸ்சி/எஸ்டி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



குற்றவாளிகள் மீது கொலை வழக்கு மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், காவல்துறை ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் செந்தில்வேல், காவலர் சௌமியன் ஆகியோரை காவல்துறையிலிருந்து பணி நீக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் குற்றசாட்டபட்டிருக்கும் ஆய்வாளர் ராஜா மீண்டும் தற்போது கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக நேற்று 16.02.2023 அன்று பொறுப்பேற்று உள்ளார். 



இதனால் மேற்படி வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால், இது நேர்மையான விசாரணையை பாதிக்கும். மேலும் எனக்கும் எனது 4 குழந்தைகளுக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஆய்வாளர் ராஜா தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் கட்சிகள் மூலமும், காவலர்கள் மூலமும், மிரட்டி வந்தது சம்பந்தமாக கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் மனு கொடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் ஆய்வாளர் ராஜா வடலூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிக்கு வந்ததால், வழக்கு விசாரணையை பாதிக்கும். அதனால் வேறு மாவட்டத்திற்கு உடனடியாக தமிழக அரசு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் கடலூர் மாவட்ட செயலாளர் கோ . மாதவன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருப்பையன் சுப்புராயன் ராஜேஷ் கண்ணன் வழக்கறிஞர் லெனின், தக்ஷிணாமூர்த்தி ஆகியோர் இருந்தனர். 

No comments:

Post a Comment

*/