கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே கீழ மூங்கிலடி உள்ளது. இங்குள்ள ஸ்ரீராகவேந்திரா பள்ளியில்பெராக் ஒக்கினாவா கோஜ்ரியோ கராத்தே பயிற்சிப் பள்ளி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஸ்ரீ ராகவேந்திரா கல்லூரி நிர்வாக இயக்குனர். திரு. டி.வி.கே.பாபு தலைமை தாங்கினார். ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப்பள்ளி கராத்தே மாஸ்டர் பி. சத்யராஜ் சிதம்பரம்காமராஜ் பள்ளி. கராத்தே மாஸ்டர் எஸ். குமரகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கராத்தே பயிற்சிப் பள்ளி நிறுவனர் சென்சாய் வி. ரங்கநாதன் அனைவரையும் வரவேற்றுவெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு சான்று. வழங்கி சிறப்புரையாற்றினார்.
சிதம்பரம் வட்டாட்சியர். திரு.ஜி. செல்வகுமார் ஸ்ரீ ராகவேந்திரா பள்ளியின் முதல்வர்.சி.நோயல் மணி வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில். ஆர். விக்னேஷ்,எஸ். ராமச்சந்திரன்,எஸ். ரோகித் சர்மா, கே. அபினேஷ்வரன் ஆகிய மாணவர்களுக்கு கருப்புப் பட்டை பெல்ட் வழங்கப்பட்டது. மாநில அளவிலான போட்டி கட்டா மட்டும் சாய் பிரிவில் நடைபெற்றது. போட்டியில் கடலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம், திருச்சி மாவட்டம் பாண்டிச்சேரி உட்பட அனைத்து பகுதிகளிலும் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட கராத்தே வீரர் வீராங்கனைகள் பங்கு பெற்றனர்.
போட்டியின் நடுவர்களாக. எம் இளவரசன்,ஆர் ரவிக்குமார்,டி. பிரித்விராஜ், பி. மனோகரன், ஏ. சத்தியமூர்த்தி, ஏ.எஸ். சிகாமணி, ஜெ. ராமலிங்கம்,சுபாஷினி,. பிரசாந்த்,ராஜ்கிரன்,மகாலட்சுமி, செந்தமிழ் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். விழா செயல்பாட்டை. ஆசிரியை ஜெயப்பிரியா முருகன், மஞ்சு,ஆஷா ராணி ஆகியோர் கவனித்தனர். நிகழ்ச்சி ஆர்.ஷர்மா நன்றி கூறுதலுடன் நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment