விருத்தாசலத்தில் கடலூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கடலூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் நகர செயலாளர்
பி.ஜி.சேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் அதிகாரம் முருகானந்தம் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோகுல கிறிஸ்டிபன், தமிழ் தேச மக்கள் முன்னணி ராஜேந்திரன், நாம் தமிழர் கட்சி பாசறை மாவட்ட செயலாளர் கதிர்காமன், ஐக்கிய கம்யூனிஸ்ட் ராஜசேகர் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி மு.ஒன்றிய செயலாளர் பழனிசாமி தமிழக வாழ்வுரிமைக் கட்சி விருதை நகர தலைவர் கந்தசாமி, மாவட்ட ஊடகப்பிரிவு ராம்பிரகாஷ், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் , மற்றும் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் இளஞ்சூரியன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்து பின்னர் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரிடம் மனு அளித்தனர்.
No comments:
Post a Comment